மாயம்

கிழக்கு வெளுக்கையிலே
கீழ் வானம் செவக்கையிலே
காட்டாறு போல உன் நினைப்பு
கரை அரிச்சு தான் போகுது..
ஆலமர பிள்ளையாருக்கு
ஆயிரம் கொடம் ஊத்தி
அரைபாதியா கரைச்ச பின்னும்
ஆசைமட்டும் ஏனோ இன்னும் கரையல..
காக்கா கூட்டுக்குள்ள
குருவி முட்ட கணக்கா
கொத்திடும் குஞ்சிக்கிடையே
கெடந்து நான் தவிக்கேன்
மாம மகனே
மாயக் காரா
மதுர வீர மீசக்காரா
மக்காச்சோள பல்லழகா
மனச நான் பூட்டிவைக்க
மச்சக் காளையா நீ சீற
மந்தெரமெதும் போடாமலே
மாயமாய் அது தொறந்ததேனடா?  

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!