நம் காதல் டம்போவிட்டா

முன் குறிப்பு 🙃 :
சிகிசோரா,டிமிசோரா - ருமேனிய நகரங்கள்
விலேட் - vlad the impler, டிராக்குல கதா பாத்திரம் உருவாக காரணமான இளவரசன்
மார்ட்டிசோர் - ருமேனியாவின் வசந்தகால திருவிழா. சிவப்பு வெள்ளை கயிரில் சிறு பொருட்கள் சேர்த்து பரிசுகளை பரிமாறிக்கொள்வர்.
புக்காரெஸ்ட் - ருமேனியாவின் தலைநகர். Bucharest was named after a shepherd called Bucur who was in love with a young lady named Dambovita,like the river that flows through the city.
டம்போவிட்டா - நதி
ஔல்டேனியா - பாலைவனம்
***********************************************************************
சிகிரோவில் டிராக்குலா
தேடி அலைபவனே..
டிமிசோராக் குடை வீதியில்
பாடி அலைபவள் நான்!
விலேடின் பரம்பரையோ
வித்தியாசக் காரனே
உயிரைக் கடைகிறாய்
உள்ளக்குறுதி கேட்கிறாய்
மலை மேடு உன் வீடு
மழைக் காடு என் கூடு
வீட்டின் சாவியைத் தொலை
காட்டில் ஆடித் தொலையலாம்
வாட்டும் குளிர் விரட்டும்
வெயிலோனே இது
வசந்த காலம்
இனி வண்ணமே பூக்கும்
நம் வாழ்வினில்
உன்கோவச் சிவப்பில்
அன்பின் வெண்மை
கோர்த்த மார்ட்டிசோர்
சேர்த்துவிடு என்னிடம்
காதல் தோய்த்த இதயம்
சேர்க்கிறேன் உன்னிடம்
புக்காராவின் காதல் நதி வற்றுகிறதாம்
டம்போவிட்டா ஔல்டேனியாவதற்குள்
நம்காதல் ஊற்றிவிடலாம்
புக்காரெஸ்டில் ஜீவநதி ஓடட்டும்... 🙃

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!