பிழம்பொன்று
காற்றுக்கெல்லாம்
அசைந்துக் கொடுக்கும்
அக்கினிப் பிழம்பு
அணையாதிருத்தலும்
ஆக்ரோசமாதலும்..
அசைந்துக் கொடுக்கும்
அக்கினிப் பிழம்பு
அணையாதிருத்தலும்
ஆக்ரோசமாதலும்..
இரத்தம் தோய்த்த
மஞ்சள் நிறத்திலே,
மஞ்சள் நிறத்திலே,
காளியும் துர்க்கையும்
தீட்டும் புனிதமும்
அழிப்பதும் அளிப்பதும்
சதையும் சத்தியமும்
தணலின் தவமும்
சுள்ளியின் சாபமும்
தீட்டும் புனிதமும்
அழிப்பதும் அளிப்பதும்
சதையும் சத்தியமும்
தணலின் தவமும்
சுள்ளியின் சாபமும்
கரைத்த மலையின் கக்கல்களும்,
குடித்த நீரின் எச்சங்களும்,
எரித்தக் கூரையின் எலும்புகளும்,
நிர்வாணமாக்கப் பட்டக் காடுகளும்...
குடித்த நீரின் எச்சங்களும்,
எரித்தக் கூரையின் எலும்புகளும்,
நிர்வாணமாக்கப் பட்டக் காடுகளும்...
பிடித்தத் திரியின் நிதானமும்,
அணைத்த அகலின் அமைதியும்,
சமைத்த விறகின் சாம்பலும்,
உருக்கி உருக்கொடுத்த உலோகமும்...
அணைத்த அகலின் அமைதியும்,
சமைத்த விறகின் சாம்பலும்,
உருக்கி உருக்கொடுத்த உலோகமும்...
பிழம்பொன்று..
ஒளி ஆக்கிடு,
உருவாக்கிடு,
இல்லை
பலி ஆக்கிடு ..
இடமதை நீயே தேர்ந்தெடு!
ஒளி ஆக்கிடு,
உருவாக்கிடு,
இல்லை
பலி ஆக்கிடு ..
இடமதை நீயே தேர்ந்தெடு!
-ஹேமா
Comments
Post a Comment