அன்பின் குறியீடு


அன்பின்
அடைப்புக்குறியாய்( {} )
அழகான
ஆச்சரியக்குறியாய் (!)
நம் காதல் வேர்விட்டு..
முற்றுப்புள்ளிக்கும்(.)
அரைப்புள்ளிக்குமிடையே(
முளைத்தெழும்
கேள்விக்குறியாய்(?)
நாம் விடையற்று
இருப்போமா
முப்புள்ளியிட்டு
தொடர்ந்திடுவோமா...
பதிப்புரிமையிட்டு(©)
பதிவேட்டினில்
பதிந்திடுவோமா
இணைப்புக்கோட்டில்(-)
இணைந்திடுவோமா-இல்லைச்
சாய்கோடாய்ச்(/)
சாய்ந்திடுவோமா
வேண்டாம்
உம்மைக்குறியிட்டு (&)
நம்மைக் கோத்துக் கொள்வோம்
உடுக்குறியோடு (*)..
பிரிவின்மைக்கு
மேற்கோளாய்த்(" ")
திகழ்ந்திடவே..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!