புத்தனின் புதல்வி
ஆமாம்
எனக்கு காது கேட்காது
தேவையில்லை
என்று கழட்டி விட்டேன்
எனக்கு காது கேட்காது
தேவையில்லை
என்று கழட்டி விட்டேன்
இதோ,அதிர்வலை!
இவை போதும் எனக்கு
நான் புத்தனின் புதல்வி
அமைதி விரும்பி
இவை போதும் எனக்கு
நான் புத்தனின் புதல்வி
அமைதி விரும்பி
பிடித்த தொழில் விவசாயம்
பொழுதுபோக்கு உடற்பயிற்சி
ஆமாம்
பெண் என குறைத்து எடையிடாதே!
எச்சரிக்கை
என்னை விட ஐம்பது மடங்கு
எடையுள்ளவனையும் தூக்குவேன்
பொழுதுபோக்கு உடற்பயிற்சி
ஆமாம்
பெண் என குறைத்து எடையிடாதே!
எச்சரிக்கை
என்னை விட ஐம்பது மடங்கு
எடையுள்ளவனையும் தூக்குவேன்
என் நாட்டிற்கு நானே ராணி
அமைச்சர்களும் உண்டு
அனைவருக்கும் மரியாதையும் உண்டு
புத்தனின் புதல்வி ஆயிற்றே
ஹிட்லர் பிடிக்குமா?
அமைச்சர்களும் உண்டு
அனைவருக்கும் மரியாதையும் உண்டு
புத்தனின் புதல்வி ஆயிற்றே
ஹிட்லர் பிடிக்குமா?
டையனாவின் அழகுடையவள்
டைனோசரையும் பார்த்தவள்
கூடி வாழ்பவள்
சேமிக்க தெரிந்தவள்!
இரண்டு வயிறாயிற்றே
சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூட
டைனோசரையும் பார்த்தவள்
கூடி வாழ்பவள்
சேமிக்க தெரிந்தவள்!
இரண்டு வயிறாயிற்றே
சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூட
பெண்ணியவாதி
ஆணை எதிர்ப்பார்ப்பதில்லை
எதற்கும்!
இனம் பெருக்கக் கூட!
ஆணை எதிர்ப்பார்ப்பதில்லை
எதற்கும்!
இனம் பெருக்கக் கூட!
இப்படி ஒரு பெண்ணா
என்று ஆச்சரியமா?
இன்னோர் இரகசியம் கூறவா?
நல்ல வேளை எனக்கு
தற்காப்புக் கலைத் தெரியும்
மனிதன் என்னை
கற்பழித்திடமுடியாது!
என்று ஆச்சரியமா?
இன்னோர் இரகசியம் கூறவா?
நல்ல வேளை எனக்கு
தற்காப்புக் கலைத் தெரியும்
மனிதன் என்னை
கற்பழித்திடமுடியாது!
இப்படிக்கு ராணி,
எறும்புக் காலணி!
எறும்புக் காலணி!
Comments
Post a Comment