யாரா.. என் யாரா.
கணினி கண்மணியே
கண்மை தீட்டியவளே
கைப்பேசும் ஓவியமே
காதல் தேவதையே
யாரா.. என் யாரா..
கண்மை தீட்டியவளே
கைப்பேசும் ஓவியமே
காதல் தேவதையே
யாரா.. என் யாரா..
பார்வை போர் வேண்டாமடி
பனியாய் நானிங்கே கரைந்தேனடி
கடக்கையில் தீண்டும் கட்டிடா
கேசத் தீண்டலே போதுமடி
யாரா.. என் யாரா..
பனியாய் நானிங்கே கரைந்தேனடி
கடக்கையில் தீண்டும் கட்டிடா
கேசத் தீண்டலே போதுமடி
யாரா.. என் யாரா..
விடுமுறை வேண்டா ஊழியன் நான்
வெள்ளி வெறுக்கும் வீணன் நான்
உரசும் காதணியின் ரசிகன் நான்
இரகசியம் பேசும் உதடுகளின்
மொழிபெயர்ப்பாளன் நான்
உரசவா இரகசியம் கூறவா?
யாரா..என் யாரா..
வெள்ளி வெறுக்கும் வீணன் நான்
உரசும் காதணியின் ரசிகன் நான்
இரகசியம் பேசும் உதடுகளின்
மொழிபெயர்ப்பாளன் நான்
உரசவா இரகசியம் கூறவா?
யாரா..என் யாரா..
வெற்றுரு நானடி
வலைப்பதிவு நீயடி
வலைப்பதியவா
வழு மறைக்கவா
வெற்றுப் பக்கம் நிரப்ப
விசை தட்டவா
விரல் பிடித்து
இசை மீட்டவா
யாரா.. என் யாரா..
வலைப்பதிவு நீயடி
வலைப்பதியவா
வழு மறைக்கவா
வெற்றுப் பக்கம் நிரப்ப
விசை தட்டவா
விரல் பிடித்து
இசை மீட்டவா
யாரா.. என் யாரா..
பதில் கூறடி
பதிவிறக்கி கொள்கிறேன்
மனதெல்லாம் உன் தரவுத்தளமடி
மீள்வி கொள்கிறேன்
செயலி நீயடி எனை கொஞ்சம்
சேமித்து வையடி
யாரா.. என் யாரா..
பதிவிறக்கி கொள்கிறேன்
மனதெல்லாம் உன் தரவுத்தளமடி
மீள்வி கொள்கிறேன்
செயலி நீயடி எனை கொஞ்சம்
சேமித்து வையடி
யாரா.. என் யாரா..
வானம் தாண்டலாம் வா யாரா..
சாளரம் மூடி வை..
பூக்கோடி பறிக்கலாம் வா யாரா..
சொடுக்கி தூக்கி எறி..
உலகம் சுற்றலாம் வா யாரா..
உலாவி நிறுவுதல் நிறுத்து..
கடல் காதல் போதுமே
கணினி மூடடடி என்
கண்களை பாரடி
யாரா.. என் யாரா....
சாளரம் மூடி வை..
பூக்கோடி பறிக்கலாம் வா யாரா..
சொடுக்கி தூக்கி எறி..
உலகம் சுற்றலாம் வா யாரா..
உலாவி நிறுவுதல் நிறுத்து..
கடல் காதல் போதுமே
கணினி மூடடடி என்
கண்களை பாரடி
யாரா.. என் யாரா....
-ஹேமா
07/17
07/17
பி.கு:
வெற்றுரு- blank character
வழு - bug/defect
தரவுத்தளம் - database
மீள்வி-Restore
செயலி - Application
சாளரம்- windows
சொடுக்கி- Mouse
உலாவி நிறுவுதல் - Installing browser
வழு - bug/defect
தரவுத்தளம் - database
மீள்வி-Restore
செயலி - Application
சாளரம்- windows
சொடுக்கி- Mouse
உலாவி நிறுவுதல் - Installing browser
Comments
Post a Comment