மருதாணி

மருதாணி பூவாசம்
மூக்கத் துளக்கையிலே
மனச ஈர்க்கையிலே
மழைதேடும் ஈசலா
தழைத்தேடி ஓடிப்போனன்..
எறும்புக் கூட்டம் சாரப் போட
கடைசி கட்டெறும்பா நான்
நாலு வீடு கடக்கையிலே
ஆளொயர செடி ஒன்னு
பூத்துக் காத்து கெடக்கு!
மரமோ செடியோ அது
ஆராய்ச்சி எனக்கெதுக்கு?
முந்தானை மடிச்சுதான்
மடமடனு பறிக்கையிலே
மதுர வீரன் கணக்கா
கடகடனு அவன் நடந்துவர
படபடனு துடிதுடிச்சு
சரசரனு நான் வீடு சேர..
பாக்கு புளி வச்சு,
ஒட்ட ஒட்ட அழவான அரைக்கையிலே
வட்ட வட்டமா அவன் நெனைப்பு
கையெல்லாம் அதப் பூசி
காத்துக் கெடக்கையிலே
அவன்
கண்ண நெனைக்கையிலே
என் மொகமெல்லாம் மருதாணி..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!