என்செல்லநாய்குட்டி
ஒளி வீசுமவன் சிறு கண்களின் முன்
வெளியின் இருளெல்லாம் தோற்றேவிட்டது
அளவற்ற அவன் காதலின் முன்
அமைதியாய் மண்டி இட்டுக் காதல் தோல்விகள்
வெளியின் இருளெல்லாம் தோற்றேவிட்டது
அளவற்ற அவன் காதலின் முன்
அமைதியாய் மண்டி இட்டுக் காதல் தோல்விகள்
வாய் பேசும் மொழியனைத்தும்
வாயடைத்து கைக்கோர்த்து கட்டிக் கொள்ளுமவன் மௌனத்திற்கு ஈடாகுமா?
சர்க்கரை கரைத்த வார்த்தைகள்
கொஞ்சல் குழைத்த அவன் வாஞ்சைகளுடன்
போட்டிதான் இடுமா?
வாயடைத்து கைக்கோர்த்து கட்டிக் கொள்ளுமவன் மௌனத்திற்கு ஈடாகுமா?
சர்க்கரை கரைத்த வார்த்தைகள்
கொஞ்சல் குழைத்த அவன் வாஞ்சைகளுடன்
போட்டிதான் இடுமா?
நிராகரித்தல்
துரோகம்
கோபம்
அகங்காரம்
அவனதிகாரத்தில் இல்லை!
மாந்தர்களின் நன்றியற்ற உலகிற்கு
மாதவம் அவன் மாதவன்..
துரோகம்
கோபம்
அகங்காரம்
அவனதிகாரத்தில் இல்லை!
மாந்தர்களின் நன்றியற்ற உலகிற்கு
மாதவம் அவன் மாதவன்..
பின்னங்கால் பிடறியிலடிக்க
காது மடல் துடிக்க
அன்பின் கடலவன்
எனை அணைக்க
அலையாய் வரும்பொழுது
அன்னையும் சற்றுத் தோற்றே நிற்பாள்
காது மடல் துடிக்க
அன்பின் கடலவன்
எனை அணைக்க
அலையாய் வரும்பொழுது
அன்னையும் சற்றுத் தோற்றே நிற்பாள்
வாலாட்டி
எனை அவன் நுகரும் நொடி
என் பெண் கர்வம் உடைந்து மழலைப் பெண்ணொருத்தி கைக்கட்டி நிற்பாள்
நூறாய் உடைந்த என் இதயத்தை
ஒட்டவைக்கும் யுக்தி அது!
எனை அவன் நுகரும் நொடி
என் பெண் கர்வம் உடைந்து மழலைப் பெண்ணொருத்தி கைக்கட்டி நிற்பாள்
நூறாய் உடைந்த என் இதயத்தை
ஒட்டவைக்கும் யுக்தி அது!
என்மொழி புரிந்தால்,
அவனிடம் நான் கேட்க எத்தனிப்பதெல்லாம்
ஒன்று மட்டுமே,
"பிரபஞ்சக் காதலை சுமக்கும் உன்னிதய வலி எவ்வளவோ?"
அவனிடம் நான் கேட்க எத்தனிப்பதெல்லாம்
ஒன்று மட்டுமே,
"பிரபஞ்சக் காதலை சுமக்கும் உன்னிதய வலி எவ்வளவோ?"
Comments
Post a Comment