அவனும் நானும்

அவனும் நானும்.. மொழியும் தெழியும்..
அவனும் நானும்.. படகும் கழையும்..
அவனும் நானும்.. மழையும் மண்ணும்..
அவனும் நானும்.. துயிலும் கனவும்...
பூவும் பிரசமும்.. பாங்கும் பாசமும்..
பொழிலும் எழிலும்.. அவனும் நானும்..
எண்ணும் கணமும்.. ஏடும் எழுத்தும்..
அவனும் நானும்.. சொல்லும் பொருளும்..
நொடியும் பொழுதும்.. குளிரும் நெருப்பும்..
முகிலும் கதழ்வும்.. முகையும் புறவிதழும்..
விண்மீனும் வெளியும்.. விசையும் இயக்கமும்..
முன்மியும் மின்னணுவும்.. நானும் அவனும்..
நானும் அவனும்.. அசையும் சீரும்..
வயலும் வரப்பும்..உலமும் கோலமும்..
நானும் அவனும்.. வினையும் கலவையும்..
தறியும் பட்டும்.. தண்டும் உலவையும்..
அவனும் நானும்.. நீவியும் சாயமும்..
அவனும் நானும்.. சுவரும் வர்ணமும்..
அவனும் நானும்.. கல்லும் உளியும்..
அவனும் நானும்..கண்ணும் ஒளியும்..
அவனும் நானும்.. ஏமமும் யாமமும்..
அவனும் நானும்.. ஆரமும் வட்டமும்..
அவனும் நானும்.. தசையும் திசுவும்..
அவனும் நானும்.. திசையும் வழியும்..
அவனும் நானும்.. மொழியும் தெழியும்..
அவனும் நானும்.. படகும் கழையும்..
அவனும் நானும்.. மழையும் மண்ணும்..
அவனும் நானும்.. துயிலும் கனவும்... 🙃
P.S :
தெழி - ஒலி
பிரசம் - தேன் /தேனீ
பாங்கு - உரிமை
முன்மி - proton
உலம் - வாசல்
உலவை - மரச்செறிவு/ மரக்கொம்பு
நீவி - ஆடை
ஏமம் - இன்பம்
கதழ்வு - வேகம்

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!