காதலாகி கடலாகி

உப்புக் காத்து என ஒரசையில
உன் வாசம் தடவிப் போகுதயா
ஓயாம வீசும் அலகடலு,
தோத்து நிக்குதிங்க என்கிட்ட
அலையா அலையிறன்
உனைத் தேடி கரையிறன்

கலங்கரையா நான் நிக்க
வழித் தேடி நீ வாரும்மையா
நேரந்தான் கூடையிலே
நெஞ்சமும் கொஞ்சம் கலங்குதையா
பகல இரவு முழுங்குதையா

நா சமைக்காத நண்டெல்லாம்
நிம்மதியாய் வீடு சேர
சமச்சதெல்லாம் நடு வீதி சேர..
சிப்பி தேடி அலையாத
சீக்கிரமே நீ வாரும்மைய்யா..
முத்தெல்லாம் எனக்கெதுக்கு?
உன் சிரிப்பேப் போதும்மைய்யா!

கரையில மீனா நான்
என் கடலே,
உன் கடலுக்கு வெட கொடுத்து
என தேடி வாரும்மையா..
என் கடைசி மூச்சுக்காத்த
பரிசா நான் வச்சிருக்கேன்!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காலம் சிறியது!