அவள்-கடல் ❤️



அவள் 
ஆச்சரியங்களின் உலகம்
தேடல்களின் துவக்கம்
அவள்
தட்டிக் கொடுப்பாள்
தன்வசம் இழுப்பாள் 
கோபமாய் கொப்பளிப்பாள்
அமைதியாய் ஆர்ப்பரிப்பாள்
நெருங்குமுன் சத்தம்
பாதிக் கடந்தால் நிசப்தம்
மனித மூளைக்கு 
விளங்கிடாதப் புதிர்
அவள் 
நீல வர்ணம் பூசிய அலங்காரி
கருப்பும் பூசிக் கொள்ளும் மாயக்காரி
சிலசமயம் கொள்ளைக்காரி
பல உயிர்களின் சரணாலயம் 
பாடம் புகட்டும் பல்கலைக்கழகம்
அவள் 
பார்க்க சலிக்காதவள்
பரந்து விரிந்தவள்
சூரியனையும் விழுங்குபுவள் 
நிலவின் குளிர்மையும் உடையவள்
எச்சரிக்கை,
அவள் மேல் காதல் மட்டும் கொள்ளாதே
உன்னை மூழ்கடித்து விடுவாள் 
மூர்ச்சையாக்கிவிடுவாள் 
வேண்டுமென்றால் 
கட்டி அணைத்துக்கொள் 
ஓர் தாயை உணர்வாய் 
அவளிடம்!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!