போர் போர்

மாற்ற இயலாத ஞாபகங்கள்
எனை ஆக்கிரமிக்க
இரவின் தனிமையோ சுற்றி
வளைத்தது எண்ண வாள் வீசி..
நான் தயாராக இல்லை!
எனக்கும் எனக்கும் ஆனா இன்னுமோர்
தூக்கம் தொலைத்த போரிற்கு..
மூளைக்கும் இதயத்திற்கும்
போர் நடந்தால்
நான் யார் பக்கம் நிற்பது?!
என் வார்த்தை எடுபடவில்லை.
போர் மூண்டது;
மூளை நிதர்சனம் எனும் வாள் எடுத்து
இதயத்தை கிழிக்க
அவளோ பதிலுக்கு
அன்பெனும் மாய வில் தொடுத்தாள்..
நடுநிசித் தாண்டியும்
போர் நின்ற பாடில்லை
நிராயுதபாணியாக நான்..!
சட்டென,
அவன் என்றோ ஒரு நாள்
எனை பார்த்து சிரித்த சத்தம்
கண்களின் வழியே ஊடுரும் நதியை துடைத்தது
அவன் போட்ட சட்டை வந்து சேர்ந்தது கவசமாய்
நிழற்படங்களோ சமாதான புறாவாய்
போர் களம் காதல் தளமானது
அடுத்தென்ன
போரில் எனைக் காப்பாற்றியதற்கு
அவனுக்கு நன்றி சொல்ல கிளம்பி
விட்டேன் நித்திரை வாகனமெடுத்து..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காலம் சிறியது!

அவள்-கடல் ❤️