இரவு மழை

தனிமையை தோழியாக்கும்
தூக்கத்தை எதிரியாக்கும்
இந்த இரவை கடந்திட
யுக்தி ஒன்று வேண்டும்..
நினைவலைகளை அடித்து
ஞாபக மூட்டையை அவிழ்க்கும்
இந்த இரவை அமைதியாக்கும்
இசை ஒன்று வேண்டும்...
எண்ணங்களை சிதறடிக்கும்
மூளையை கலங்கடிக்கும்
இந்த இரவின் வாயடைக்க
வார்த்தை ஒன்று வேண்டும்..
நாட்காட்டியை புரட்டி போட்டு
கடந்த காலத்திற்கும்
எதிர் காலத்திற்கும்
இழுத்து செல்லும் இந்த இரவை
நிகழ் காலத்தில் கட்டிடும்
கயிரொன்று வேண்டும்..
எரியும் இந்த நெருப்பை
அணைக்கும் மழை ஒன்று வேண்டும்..
அதில் முழுமையாய் நான்
நனைந்திட வேண்டும்..
முடிவில்லா இரவுதனை
கரைத்திடும் கரைப்பான் ஒன்று வேண்டும்..
அதில் இந்த கருப்பினை
முழுமையாய் கரைத்திட வேண்டும்..
இந்த நீண்டதோர்
இரவை தாங்கும் கோப்பை
ஒன்று வேண்டும்..
ஒரு துளி மிச்சமின்றி அதை
குடித்திட வேண்டும்..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!