குட்டி கவிதைகள்

உதறி தள்ளியும் விழாமல்
என் விரலோடு ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் நினைவு
*****
நினைவு சாயம்
வெளுக்காமல் இருக்க,
குடை பிடித்து திரிகிறேன்..
கொஞ்சம்,
நிஜமென்னும் வெண்மை பூசிடு..
சற்று நனைந்துக் கொள்கிறேன்
மழை முடிவதற்குள்
***
கோடை வெயில்
அவன் மேல் எல்லாம்
வியர்வை துளிகள்
மண் வாசனையுடன்
மழை பெய்கிறது என்றேன்
ஏதும் புரியாதவனாய்
புன்னகைத்து நகர்ந்தான்
புயலும் அடிக்கிறது என்றேன்
திரும்பி‌ ஓர் பார்வை விடுத்தான்
இப்பொழுது நான் ஏதும்
பேசவில்லை
மின்னல் தாக்கி
வார்த்தைகள் தொலைத்த
ஊமையாகி விட்டதால்..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!