தனிமை கீதம்


சிறு பறவை தாங்கிய
கிளையின்
தனிமை கீதம்..
யார் கேட்டது?
சிறகு விரித்து
பறவை பறந்ததும்,அந்தத்
திசை நோக்கி அந்தக் கிளை
ஆடியதே கடைசி..
அதன் பின் சலனமில்லை
எந்தப் புயலுக்கும்
செவி சாய்க்கவில்லை
இதோ அந்தப் பறவையின்
கால் தடங்கள்
ஆறா வடுவாய்
எந்த மழையும்
அதை அழித்திடவில்லை..
தூக்கத்தில் கட்டிக் கொண்ட
கால்கள்
முத்தமிட்ட அலகுகள்
கொத்தித் தின்றப் பழம்
இவை எதையும்
கிளை மறக்கவில்லை..
அந்த மரத்தில்
பல கிளிகள்
பல குயில்கள்
கிளை மறுத்துவிட்டது!
- ஹேமா
படத்திற்கு நன்றி : BalaGraphy

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!