நட்பெனும் பாதையிலே..

பார்த்தவுடன்
புன்னகை ஒன்றைப்
பரிமாறிக் கொள்ள, ஒரேப்
பாதையில் இணைந்துக்கொண்டோம்
கைக்கோர்த்து
கவலைகள் மறந்து
வண்ணங்கள் தீட்டிச் செல்கிறோம்
வழி யாவும்..
வழியில்,
உடைந்த பட்டாம்பூச்சி சிறகை ஒட்டி
பறந்தோடி
கிணற்றில் போட்ட பழைய கனவை
மீட்டு
நம் கடமை மூட்டை சற்றே கணக்கும் போது
தோள் கொடுத்து
நினைவு கூழாங்கற்களை சேமித்துக் கொண்டே
செல்கிறோம்..
நான் ,
நீ சோர்ந்தால்
பூ மொட்டொன்று கொடுப்பேன்
நீ,
நான் சோர்ந்தால்
சேமித்த மொட்டை
மலராக்கி கொடுப்பாய்
இப்படிதான் மொட்டெல்லாம்
மலராகிறது
இந்தப் பாதையில்
என்றோ ஒரு நாள்
நாம் பாதை மாறினால்
இந்த மொட்டெல்லாம்
மலராமலே போய் விடக்கூடும்
அதற்காகவேனும் இனி
சேமிக்கும் நினைவு கூழாங்கற்களை
வழி நெடுக்க சிந்திக் கொண்டே
போவோம்
நாம் பாதை மறந்தாலும்
அவை நம்மை
இணைத்திடும்
புன்னகை பூ பூத்து
நட்பெனும் பாதையிலே..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!