பாலை - 1
பாலை யாழ் மீட்டி
பருந்தோட்டும் ஒருத்தன்
கேட்க செவியில்லை
இசை மீட்டி என்ன பயன்?
ஓயாமல் அடிக்கும் அனல்
காற்றுடன்
போட்டியோ?
பருந்தோட்டும் ஒருத்தன்
கேட்க செவியில்லை
இசை மீட்டி என்ன பயன்?
ஓயாமல் அடிக்கும் அனல்
காற்றுடன்
போட்டியோ?
இரசவாதியோ?
இல்லை
இலட்சியவாதியோ?
இருப்பை அடியில்
இரும்பாய் ஒருத்தன்!
இல்லை
இலட்சியவாதியோ?
இருப்பை அடியில்
இரும்பாய் ஒருத்தன்!
ஊரும் பாம்பும் தேளும்
அவனை தடவி செல்ல
ஒரு புன்னகை உதிர்க்கிறான்!
அவன் வளர்க்கும்,
செல்ல பிராணிகள் போலும்!
அவனை தடவி செல்ல
ஒரு புன்னகை உதிர்க்கிறான்!
அவன் வளர்க்கும்,
செல்ல பிராணிகள் போலும்!
கூவல் வேண்டாம்
கானல் நீர் போதும் என்கிறான்
திருடிய உணவெதற்கு
கள்ளிப் பழம் போதுமென்கிறான்
பறை அடித்துக் கொண்டே..
கானல் நீர் போதும் என்கிறான்
திருடிய உணவெதற்கு
கள்ளிப் பழம் போதுமென்கிறான்
பறை அடித்துக் கொண்டே..
பறந்தலையில் எப்பொழுதும் அது
ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்..
கொற்றவை கேட்க!
பிரிதலுக்கு பெயர் போன இடம்
ஊடல் கொள்ளும் வரை
அந்த சூறை கோட்பறை
ஒளித்துக் கொண்டேதான் இருக்கும்..
ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்..
கொற்றவை கேட்க!
பிரிதலுக்கு பெயர் போன இடம்
ஊடல் கொள்ளும் வரை
அந்த சூறை கோட்பறை
ஒளித்துக் கொண்டேதான் இருக்கும்..
அந்த வேனிற்காலம் முடிந்தே விட்டது
ஆனால்,அவன் வாசிப்பதை மட்டும்
நிறுத்தவே இல்லை..
குராப் பூவுடன்
கலந்து வீசிய அந்த தனிமை கீதம்
என்னைவிட்டு விலகவே இல்லை..
ஆனால்,அவன் வாசிப்பதை மட்டும்
நிறுத்தவே இல்லை..
குராப் பூவுடன்
கலந்து வீசிய அந்த தனிமை கீதம்
என்னைவிட்டு விலகவே இல்லை..
Comments
Post a Comment