வேடிக்கை பார்ப்பவள்-2

"ஒன்னு ஐஞ்சு..மூனு பத்து"
ஒரு மூலையில் அரங்கேறும்
வியாபார வியூகம்
விற்றுத் தீர்ந்தது..
கானா பாடல் போல
ஒலிக்கும் ஊர்களின் பெயர்கள்
பாடகன் நடத்துனராய்
கனவுகள் சில்லரையாய்..
ஆவிப் பறக்கும் கல்
வட்டமாய் நீளமாய்
வெண்மையாய் வண்ணமாய்
வரைந்துக் கொண்டிருக்கும் அவன்..
கண்ணாடி காலில் தைக்கவில்லை
அவன் செருப்பை தைத்துவிட்டான்..
கொசுக்கள் பறந்தன
வாசம் போடுபவன் வந்துவிட்டான்
மயிலிறகு குட்டிபோடா விட்டாலும்
அவனை பட்டினிப் போடவில்லை..
மலர்கள் மென்மையானவையா?
மூட்டை சுமக்கும் அவன்
முகத்தில் வழியும் வேர்வை சொன்னது,
"மலர்களும் கணக்கும்"..
நான் நாலாவாறு தொலைந்திருந்தேன்
நலம் விசாரித்தல் நடந்து கொண்டிருந்தது
முதல் இருக்கைக்கும் கடைசி இருக்கைக்கும்
பேருந்து இன்னும் நகரவில்லை..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!