செங்கோல் பிறந்த கதை

அந்த சிறுவன்
அடர்ந்த காடொன்றில்
ஆடு வளர்த்திருந்தான்..
அன்பையும் ..
மந்தை சேர்த்தான்
பின் ஒருநாள்,
மாடு சேர்த்தான்
பாடி திரிந்தான்
கார் எல்லாம்
மாரி பொழிய
காட்டாறு பாடி சேரி ஓட
மகிழ்ந்தானாம் ஆயர் அவன்..
களவு மறந்தான்
கற்பு என்றான்
தாய் வழி அழித்து
தந்தை வழி வரைந்தான்
ஆநிரை சேர
ஆணவம் சேர
ஆண் என்றான்
அரசன் என்றான்
இருத்தல் என்றான்
பெண்கள் கடமைகளை
ஆற்றி அடிமைகளாய்
இருத்தல் என்றான்
ஆநிரை கவர்ந்தான்
வெற்றி என்றான்
ஆணவம் ஏற்று
வெறுப்பை பெற்றான்
அவன் ஆடு மேய்த்த கோலை
மட்டும் அவன் விடவே இல்லை
அதன் பெயர் செங்கோல்
என்றான் அந்த சிறுவன்!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!