வானவில் உடுத்தி
மின்னல் மையிட்டு
மண் வாச மழை தெளித்து
காதில் விண்மீன் மிளிர
முகில் மலர்களோ குழலில்
மணக்க..
கைவளையலாய்
சிறு பாறைகள் சிதற
கதிரவன் கன்னத்தில்
வண்ணமிட
கடலன்னை அளித்தாள்
சங்கு சிப்பிக் கால் கொலுசை..
இடி மேளம் முழங்க
நிலா ரதம் ஏறி
தென்றல் தோழி கதை கேட்டு
காதல் தேவனை நோக்கி அவள்..

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!