வேடிக்கை பார்ப்பவள்
அவள் கையில் ஒரு கூடை பூக்கள்
தலையில் ஒற்றை பூவில்லை
அந்த பூக்கள் அனைத்தும் விற்பனைக்கே!
தலையில் ஒற்றை பூவில்லை
அந்த பூக்கள் அனைத்தும் விற்பனைக்கே!
அதோ,அங்கே தலைவலியுடன்
தேநீர் போடும் அவர் மற்றவர்களின்
தலை வலி தீர்க்க..
தேநீர் போடும் அவர் மற்றவர்களின்
தலை வலி தீர்க்க..
பசி நிறைந்த கண்கள்,
வண்டி நிறைய பழங்கள்
விற்கவில்லை..
வண்டி நிறைய பழங்கள்
விற்கவில்லை..
கிழித்து கிழித்து ஒட்டும் ஒருத்தன்
சுவரொட்டியை..
சுவரொட்டியை..
உதட்டில் புன்னகை..
மேசை துடைத்த
சிறுவன் கையில் சில்லறை..
மேசை துடைத்த
சிறுவன் கையில் சில்லறை..
சுத்தம் சோறு போடும்
குப்பை பொறுக்கும் ஒருத்தி..
குப்பை பொறுக்கும் ஒருத்தி..
இவர்களை வேடிக்கை
பார்ப்பவளாய் நான்
பேருந்து நகர்ந்து விட்டது
இன்னும் பல பாடங்கள்
நான் படிப்பதற்கு முன்..
பார்ப்பவளாய் நான்
பேருந்து நகர்ந்து விட்டது
இன்னும் பல பாடங்கள்
நான் படிப்பதற்கு முன்..
Comments
Post a Comment