நானெனும் நீ
நடுங்கும் ஓர் குளிரிரவில்
நரம்புகள் கிழிக்கும் ஞாபக ஈட்டியால்
நினைவு மெத்தைக்குள் பொதிந்தே
நீர் கோலமிடுகிறேன் போர்வையில்..
சிந்தும் துளியெல்லாமுன் பிம்பம்
சித்தன்னவாசல் ஓவியமாய்
அது மாயை ஆனால் மறுக்கும்
அறிவியல் மறந்த மனம்
சுயமே மறந்த மனமாதலால்
திரட்டியத் துளிகள் சேர்த்து
ஞாபக மூட்டையை பிரித்து
ஒவ்வொன்றாய்த் துவைத்து
அலசி அடித்துக் கசக்கிப் பிழிந்த பின்னும்
அதில் இன்னும் ஒரு சொட்டு ஞாபகம்
ஒரு சொட்டின் தொடர் வினையால்
மறு கணமே மூட்டை நிறையும்
வினைப்பயனால் கூடும் கனம்
மூட்டை சுமந்தே தேய்ந்த முதுகெலும்பை
முட்டியே உள்நுழையும் ஞாபகக்கூறுகள்
மச்சில் கலந்து பின்னதைக் குடைந்து
நெஞ்சின் உள்ளே நுழைந்து வெடிக்கும்
வெடித்தத் துகள்கள் உதிரத்தில் குழைந்த
அடுத்த நொடி
நானெல்லாம் நீயாகிப் போகும்!!!
நரம்புகள் கிழிக்கும் ஞாபக ஈட்டியால்
நினைவு மெத்தைக்குள் பொதிந்தே
நீர் கோலமிடுகிறேன் போர்வையில்..
சிந்தும் துளியெல்லாமுன் பிம்பம்
சித்தன்னவாசல் ஓவியமாய்
அது மாயை ஆனால் மறுக்கும்
அறிவியல் மறந்த மனம்
சுயமே மறந்த மனமாதலால்
திரட்டியத் துளிகள் சேர்த்து
ஞாபக மூட்டையை பிரித்து
ஒவ்வொன்றாய்த் துவைத்து
அலசி அடித்துக் கசக்கிப் பிழிந்த பின்னும்
அதில் இன்னும் ஒரு சொட்டு ஞாபகம்
ஒரு சொட்டின் தொடர் வினையால்
மறு கணமே மூட்டை நிறையும்
வினைப்பயனால் கூடும் கனம்
மூட்டை சுமந்தே தேய்ந்த முதுகெலும்பை
முட்டியே உள்நுழையும் ஞாபகக்கூறுகள்
மச்சில் கலந்து பின்னதைக் குடைந்து
நெஞ்சின் உள்ளே நுழைந்து வெடிக்கும்
வெடித்தத் துகள்கள் உதிரத்தில் குழைந்த
அடுத்த நொடி
நானெல்லாம் நீயாகிப் போகும்!!!
Comments
Post a Comment