மௌனமொழி
என் பிரபஞ்சம் அனைத்தும்
உன் சாயல் பூசியே திரிவதால்
எங்கும் நிசப்தம்..
உன் அமைதியால்
நான் நடமாடும் மயானக்காடாகி
போனேன்!
உன் மௌனக்கடலில் நீச்சல் பழகுகிறேன்
என் வெறுமையை தீர்க்கும் வார்த்தை முத்தொன்றெடுக்க
மூழ்கியும் தொலைகின்றேன்!
மழலையின் முதல் குரல்
கேட்கத் தவிக்கும் தாயாய்
வராதா கடிதமொன்றுக்காக
காத்துக்கிடக்கும் தபால் பெட்டியாய்
ஏங்கி நான் கிடக்கிறேன்!
நீ என்றோ பேசிய வார்த்தைகள் அனைத்தையும்
சலவை செய்தே அதன் சாயம் வெளுத்தாகிவிட்டது..
நூலிழைகள் பிரிந்து
பஞ்சாகி காற்றில் பறந்தோடி விட்டது!
எஞ்சியிருக்கும்,
உன் மௌனங்களை மொழிப்பெயர்த்தே
நான் வார்த்தைகளை மறக்கிறேன்!
நான் முழுமையாய் பேச மறப்பதற்குள்
ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு!
இந்தப் பிறவி கடப்பதற்கு போதுமானதாய்
ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு!
ஆயிரம் ஆறுதல் கேட்டும் ஆறாத காயம் தீர்க்க
ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு!
பிழைத்துக் கொள்கிறேன்..
உன் சாயல் பூசியே திரிவதால்
எங்கும் நிசப்தம்..
உன் அமைதியால்
நான் நடமாடும் மயானக்காடாகி
போனேன்!
உன் மௌனக்கடலில் நீச்சல் பழகுகிறேன்
என் வெறுமையை தீர்க்கும் வார்த்தை முத்தொன்றெடுக்க
மூழ்கியும் தொலைகின்றேன்!
மழலையின் முதல் குரல்
கேட்கத் தவிக்கும் தாயாய்
வராதா கடிதமொன்றுக்காக
காத்துக்கிடக்கும் தபால் பெட்டியாய்
ஏங்கி நான் கிடக்கிறேன்!
நீ என்றோ பேசிய வார்த்தைகள் அனைத்தையும்
சலவை செய்தே அதன் சாயம் வெளுத்தாகிவிட்டது..
நூலிழைகள் பிரிந்து
பஞ்சாகி காற்றில் பறந்தோடி விட்டது!
எஞ்சியிருக்கும்,
உன் மௌனங்களை மொழிப்பெயர்த்தே
நான் வார்த்தைகளை மறக்கிறேன்!
நான் முழுமையாய் பேச மறப்பதற்குள்
ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு!
இந்தப் பிறவி கடப்பதற்கு போதுமானதாய்
ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு!
ஆயிரம் ஆறுதல் கேட்டும் ஆறாத காயம் தீர்க்க
ஒரே ஒரு வார்த்தை கொடுத்துவிடு!
பிழைத்துக் கொள்கிறேன்..
Comments
Post a Comment