கைரேகை ஓவியம்

வெள்ளைக்காகிதம் எனை
கைரேகை ஓவியங்களால்
நீ நித்தமும் நிரப்புகிறாய்

விரல் தூரிகையால் உணர்வுகள் குழைத்து
மோகப்படங்கள் வரைகிறாய்
மென்தேகம் கடந்து திசுக்களிலும் அணுக்களிலும்

ஒரே ஓவியங்கள் வரைபவனில்லை நீ
ஒவ்வொன்றும் புதுநிறம்
இரவின் கருப்பு, நிறங்களை விழுங்க
முயன்று தினமும் தோற்றே நிற்கும்!

ஓவியங்களில் லயித்து
உணர்ச்சிகளால் உணர்வற்று இருக்கும்
என்மேல் ஓடும் உவர் ஜீவநதியால்
ஓவியங்கள் அழிவதில்லை
அவைகளின் ஈரம் காய்வதுமில்லை..


Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காலம் சிறியது!

அவள்-கடல் ❤️