மனப் பட்டாம்பூச்சிகள்
உன் கண்சிமிட்டலைக் கண்டுதான்
என் மனப் பட்டாம்பூச்சிகள் பறக்கப் பழகுகின்றன
தொண்டைக்குழியில் ஓராயிரம் வார்த்தைக் கருக்கள்
உன் ஒலி குடித்தே நித்தமும் வளர்கின்றன
விடாமல் பற்றி எரியுமென் மனதில்
உன் புன்முறுவல்கள் எண்ணெய் ஊற்றுகின்றன
வியர்வைத் துளியில் தலைத் துவட்டி மலர
விரல் மொட்டுகள் காத்துகிடக்கின்றன
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
விடையற்ற வினாக்கள் ஜனித்து மரிகின்றன
உயிரில் பாதியை காற்றில் கரைத்து
உன்னுள் அனுப்புகிறேன்
இணையாத நம் துருவங்களை இணைக்கும் முயற்சியில்...
கரையணைக்கக் கடல் தூதுவிடும் அலையாய்
நினைவலைகள் தூதுவிட்டே நித்தமும் வாழ்கிறேன் தனித்தீவாய்!

Comments
Post a Comment