வாயை மூடிப் பேசவும்
மிகைப்படக்கூறு..
கவனிக்கப்படுவாய்!
குறைத்துக்கூறு..
பரிகசிக்கப்படுவாய்!
உள்ளப்படிகூறு..
உண்மையில்லை யெனப்படுவாய்!
பேசாதே..
கோழை என்பார்!
அதிகம் பேசு..
பேதை என்பார்!
சிரித்து பேசினால் பித்தன்
சிரிக்கவில்லை என்றால் சிடு மூஞ்சி..
ஆமாம் என்றால் புத்தியற்றவன்
இல்லை என்றால் விதண்டாவாதி!
போற்றினால் பொய்மை
தூற்றினால் கயமை
மாற்றினால் தந்திரம்
மாற்றவில்லை எனில் பிடிவாதம்!
அறிவுரை தந்தால் அதிகப்பிரசங்கி
இல்லையேல் அறிவிலி
ஆறுதல் கூறினால் போலியானவன்
இல்லையேல் அக்கறையற்றவன்
இன் சொல் வஞ்சகன்
வன் சொல் நஞ்சகன்
சலனமற்றவன் ஜடம்
சாந்தமானவன் சாமியார்
ஆர்ப்பரித்தால் ஆவேசம்
பொறுமையென்றால் வேசம்
இவற்றுக்கெல்லாம்
நடுநிலையறிந்து
நடந்தால் கிடைக்கும்
நடிகன் எனும் பட்டம்!!
கவனிக்கப்படுவாய்!
குறைத்துக்கூறு..
பரிகசிக்கப்படுவாய்!
உள்ளப்படிகூறு..
உண்மையில்லை யெனப்படுவாய்!
பேசாதே..
கோழை என்பார்!
அதிகம் பேசு..
பேதை என்பார்!
சிரித்து பேசினால் பித்தன்
சிரிக்கவில்லை என்றால் சிடு மூஞ்சி..
ஆமாம் என்றால் புத்தியற்றவன்
இல்லை என்றால் விதண்டாவாதி!
போற்றினால் பொய்மை
தூற்றினால் கயமை
மாற்றினால் தந்திரம்
மாற்றவில்லை எனில் பிடிவாதம்!
அறிவுரை தந்தால் அதிகப்பிரசங்கி
இல்லையேல் அறிவிலி
ஆறுதல் கூறினால் போலியானவன்
இல்லையேல் அக்கறையற்றவன்
இன் சொல் வஞ்சகன்
வன் சொல் நஞ்சகன்
சலனமற்றவன் ஜடம்
சாந்தமானவன் சாமியார்
ஆர்ப்பரித்தால் ஆவேசம்
பொறுமையென்றால் வேசம்
இவற்றுக்கெல்லாம்
நடுநிலையறிந்து
நடந்தால் கிடைக்கும்
நடிகன் எனும் பட்டம்!!
Comments
Post a Comment