சல்லாப எலிகள்
சாளரம் கிழித்து கன்னம்
வருடும் காற்று
கூடவே காதிலோடும் கானம்
இமைகள் இணைந்திட துடிக்க
இதயம் திடுக்கிட்டு உரக்க உரைத்தது,
"இதுப் பேருந்து..
ஒட்ட படாத ஓட்டைகளில்
சல்லாப எலிகள் வாலாட்டலாம்
அரிக்கும் அதன் விரல்கள்
புதிதாய் ஓட்டையும் போடலாம்
கண்காட்சி பொருளாவாய்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
ஒருயிடமும் மிச்சமில்லாமல்..
அனுமதியின்றி அத்துமீறி
அந்தரங்கம் தொட நினைக்கும்..
துப்பட்டா கவசமெல்லாம்
செல்லாது
போர்வையையும் துளையிடும்
காமூக எலிகளிடம்!
கண்ணாடி திரையிட்ட பார்வையோ
அங்குலம் அங்குலமாக உடலை அளக்கும்
அதன் விரல் புழுக்களோ
நீண்டு நெளிந்து
ஆடையின் முடிவுகளிலே
நுழைந்திட துடிக்கும்..
கண்விழித்து
கூக்குரல் நீயிட்டால் கேட்க
திராணியற்ற முதுகெலும்பு வாயில்லா
சுயநல மாந்தர் பலர் சூழ் உலகிது
செய்தியின் தலைப்பாய் நீயானால்
சமூக வலைதளங்களில் பதியப்படுவாய்
கிடைக்கும் லைக்கும் ஷேரும்!
ஆகையால்,
விழித்தேயிரு கையிலோர் கட்டையோடு..
தொட்டவுடன் எரித்து சாம்பலாக்கும்
கவசம் ஒன்றைப் படைக்கும் வரை !!!"
வருடும் காற்று
கூடவே காதிலோடும் கானம்
இமைகள் இணைந்திட துடிக்க
இதயம் திடுக்கிட்டு உரக்க உரைத்தது,
"இதுப் பேருந்து..
ஒட்ட படாத ஓட்டைகளில்
சல்லாப எலிகள் வாலாட்டலாம்
அரிக்கும் அதன் விரல்கள்
புதிதாய் ஓட்டையும் போடலாம்
கண்காட்சி பொருளாவாய்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
ஒருயிடமும் மிச்சமில்லாமல்..
அனுமதியின்றி அத்துமீறி
அந்தரங்கம் தொட நினைக்கும்..
துப்பட்டா கவசமெல்லாம்
செல்லாது
போர்வையையும் துளையிடும்
காமூக எலிகளிடம்!
கண்ணாடி திரையிட்ட பார்வையோ
அங்குலம் அங்குலமாக உடலை அளக்கும்
அதன் விரல் புழுக்களோ
நீண்டு நெளிந்து
ஆடையின் முடிவுகளிலே
நுழைந்திட துடிக்கும்..
கண்விழித்து
கூக்குரல் நீயிட்டால் கேட்க
திராணியற்ற முதுகெலும்பு வாயில்லா
சுயநல மாந்தர் பலர் சூழ் உலகிது
செய்தியின் தலைப்பாய் நீயானால்
சமூக வலைதளங்களில் பதியப்படுவாய்
கிடைக்கும் லைக்கும் ஷேரும்!
ஆகையால்,
விழித்தேயிரு கையிலோர் கட்டையோடு..
தொட்டவுடன் எரித்து சாம்பலாக்கும்
கவசம் ஒன்றைப் படைக்கும் வரை !!!"
Comments
Post a Comment