துறவி இலைகளே

பச்சை துறந்து
காவி பூசிய
துறவி இலைகள்

இங்கொன்றும்
அங்கொன்றுமாய்
தவக்கோலமெய்தி

இப்படி
அசைந்திடா
நீண்டதோர்
நித்திரையிட
கற்று தந்ததாரோ
துறவி இலைகளே?

காற்றுக்கு
நெளிந்து வழி கொடுத்தாய்
கதிர் ஒளி பாயப்
பொத்தல் காது கொடுத்ததாய்
மிதித்துடும்
மாக்கள் மற்றும் மக்களுக்கு
உடலை மடிந்துக் இடம் கொடுத்ததாய்
இப்படி தன்னலமற்று
வாழக் கற்றுக் தந்ததாரோ
துறவி இலைகளே?



வழிப்போக்கன் நான்
உன் தவக் கோலம்
பார்த்து மதி மயங்கிய
சிறு வழிப் போக்கன் நான்
உனை ஒரு கணம்
உற்று பார்த்து
வழிப்பாதை தனில்
வாழ்க்கை புரிந்த
வழிப்போக்கன் நான்
"துயரப் புயலோ,கோப வெயிலோ
நீ நின் நிலை மாறாதிருந்தால்
நிலைத்திருப்பாய்"
மௌன மொழியில்
உரைத்தமைக்கு
நன்றிகள் பல
துறவி இலைகளே..

Comments

  1. துறவி இலைகள் உயிர் துறக்கும்
    நாட்களும் மிக அருகில்,
    துறவி கொள்ள பச்சை இலைகளும்
    இனி இல்லை,
    பிழைத்து துளிர்ப்பேனோ மீண்டும்
    வையகம் பச்சை
    படர்ந்து வண்ணம் தீட்ட
    வழி தருவாயா மானிடா ?

    - மரம்

    ReplyDelete
  2. வடக்கிருக்க விரும்பும் துரவியாய்
    துறவி இலை அனைவரையும் அரவனைத்து யாரையும்
    கடிந்துகொள்ளாமல்
    கால் மிதி பட்டு
    மண்ணுக்கு உரமாகி
    மறுபிறவி பெற்றிடும்
    வேறோர் மரத்திலே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!