இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு?
அவள்,
மயிலிறகு குட்டிப் போடும் என்பாள்
அவன்,
பென்சில் சீவீ தூள் கொடுப்பான்
அவள்,
கண்ணாமூச்சி ஆடலாம் வா என்பாள்
அவன்,
அவள் கண் முன்னே ஒளிந்துக் கொள்வான்
அவள்,
மழையில் கப்பல் விடலாம் என்பாள்
அவன்,
அவளுக்கு வாழையிலை வைத்துக் குடை பிடிப்பான்
அவள்,
கலர் கோழி வளர்த்தாள்
அவன்,
கழுகோட்டினான்
அவள்,
கொட்டாங்குச்சி வைத்து சோறாக்கினாள்
அவன்,
அவள் உண்ட மிச்சம் உண்டான்
அவள்,
புளியங்காய் தின்ன
அவன்
மரமேறுவான்..
அவள்,
நதியில் குளிக்க
அவன்,
மீன்களின் கண் மூடுவான்
இப்படி அப்படியாக
அவன் அவளுக்காக
அன்பை பொழிய
அது
எளிமையாகவும் அழகாகவும்
அந்த தேசமெல்லாம்
வழிந்தோடியது...
அதுவே பின்னோர் காலத்தில்
யமுனா என்றழைக்கப் பட்டதாகவும்
அங்கே அவர்களுக்காக ஒரு காதல் சின்னம்
நிறுவப்பட்டதாகவும் ஒரு வரலாறு!!! 😉
#புனைவு
- ஹேமா
மயிலிறகு குட்டிப் போடும் என்பாள்
அவன்,
பென்சில் சீவீ தூள் கொடுப்பான்
அவள்,
கண்ணாமூச்சி ஆடலாம் வா என்பாள்
அவன்,
அவள் கண் முன்னே ஒளிந்துக் கொள்வான்
அவள்,
மழையில் கப்பல் விடலாம் என்பாள்
அவன்,
அவளுக்கு வாழையிலை வைத்துக் குடை பிடிப்பான்
அவள்,
கலர் கோழி வளர்த்தாள்
அவன்,
கழுகோட்டினான்
அவள்,
கொட்டாங்குச்சி வைத்து சோறாக்கினாள்
அவன்,
அவள் உண்ட மிச்சம் உண்டான்
அவள்,
புளியங்காய் தின்ன
அவன்
மரமேறுவான்..
அவள்,
நதியில் குளிக்க
அவன்,
மீன்களின் கண் மூடுவான்
இப்படி அப்படியாக
அவன் அவளுக்காக
அன்பை பொழிய
அது
எளிமையாகவும் அழகாகவும்
அந்த தேசமெல்லாம்
வழிந்தோடியது...
அதுவே பின்னோர் காலத்தில்
யமுனா என்றழைக்கப் பட்டதாகவும்
அங்கே அவர்களுக்காக ஒரு காதல் சின்னம்
நிறுவப்பட்டதாகவும் ஒரு வரலாறு!!! 😉
#புனைவு
- ஹேமா

Comments
Post a Comment