என்றோ பெய்த மழை

முன் என்றோ பெய்த
மழை
இன்றும் நனைக்கின்றது
என்னை

அன்று
மேகமும் இடிக்க மறுத்து
தென்றலை தூது விட்டது
மழைச் சாரலில்
நாம் இன்னும் சற்று
கதைப் பேச

கதைகளும் கனுவுகளும்
மழை இரவை
களவாடின
மழை தொலைத்தக்
காலையில்
மரத்தடியில் கிளைகளைக்
குலுக்கி
குளியலாடினோம்
நம் காதல் சற்றுக் கரைந்து
வேரோடியதால்...
மரமோ...!
சாகா
வரம் பெற்றது

பின் என்ன
கதிரவன் உடுத்தி
கைவிரல்கள்
பிடித்து
நாம் ஓடினோம்
இன்னும்
வராத இன்னொரு
மழை இரவை நோக்கி

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!