Posts

Showing posts from 2017

The Right Time

“I am waiting for the right time”, that’s the excuse most us use to procrastinate and to run away from the things which we want to accomplish. Is “The right time” really exists or is just a myth? Do you believe in “Right things happen at the right time”? , “If time and tides wait for none then why we wait for the time?”. I had these questions in my mind, Since, I also use the same excuse to postpone my work. A month back I realized the answers for these questions and it was not too late. So,in the beginning of this year I made list of “to do” which I wanted to accomplish within the year end.I make this list every year and I never accomplished even half of them which is a well known story. This year I wanted twist in that tale. Do you think I achieved all of them? The answer is big no.All of them were sleeping happily in my Google keep note until November because I was waiting for the so called “Right Time”. What happened in November? And what change it made? First week of November...

காத்திருக்கிறாள் அவள்

Image
காத்திருக்கிறாள் அவள் காலை கதிரவன் திரைச்சீலை கிழித்து பாயும் ஒலி பட்டதும் வாசல் வரை ஓடி அவனை காணாது சன்னல் கம்பியிடையே சலனமற்று காத்திருக்கிறாள் அவள் சில கசங்கிய கடிதங்கள் பல உடைந்த பொம்மைகள் எங்கோ எப்பொழுதோ எடுத்த ஓர் புகைப்படம் இவைகள் தரும் ஞாபக மருந்தோடு காத்திருக்கிறாள் அவள் தொலைபேசி அடிக்கும் ஒலிக் கேட்டு சட்டென ஓடி பட்டென எடுத்து அதில் அவன் குரல் கேளாது அணைத்து பின் துடித்து காத்திருக்கிறாள் அவள் என்றுமே வராத அவன் அழைப்பிற்காக நான்கு சுவர் சேர்த்து ஓர் உலகம் செய்து அதில் எங்கும் அன்பை நிரப்பி நினைவுகளை சுவாசித்து எண்ணங்களை புசித்து தனிமை உலகம் அதனை அழகாக்கி காத்திருக்கிறாள் அவள் அவள் கேள்வியாய் வளைந்த தேவதை முக்கால் நூற்றாண்டை கடந்த கவிதை கன்னக்குழியும் நெற்றி சுருக்கமும் கால வெள்ளத்தின் சுவடு நரை - மிதந்து போகும் வெண்முகில் தளர்ந்த நடை - மீதி இருக்கும் ஆற்றலின் சான்று கண்களிள் எங்கோ வெறித்தப் பார்வை ஏற்றி தொலைந்து போன நேசத்தை யாசித்து காத்திருக்கிறாள் அவள் அவளின் மகனின் வருகைக்காக முதியோர் இல்லத்தில் ஓர் ஈரப் புன்னகையோடு..

Irrevocable memories

Haunted by the irrevocable memories Surrounded by the darkness of void Watching soldiers of sharp thoughts Approaching me I laid still unarmed Am not prepared for the war War between me and my thoughts And the long insomniac night So I laid still unarmed With my eyes closed And the magic happened T-shirt once he wore came as an armor Pictures of him next to me enlightened the void Unopened old diary as battle flag His smile,part of my soul came with sword And killed the soldiers I won the war once again His Irrevocable memories Saved me from another long night!

முடிவிலி

Image
விண்மீன் தெளித்த வீதியில் துள்ளித் திரிந்து பஞ்சு மிட்டாய் மேகத்தில் மிதந்து கதிரவன் கைகளில் குளிர் காய்ந்து நிலா தோழியிடம் கதைகள் கதைத்து களைத்து பூலோக விட்டமே ஆரமாய் ஓர் வட்டமிட்டு  கடல் அலை ஊஞ்சலில் காத்திருந்தாள் அவள். அவள் ஓர் ஒற்றை சிறகு தேவதை! ஒற்றை சிறகு காற்றில் மிதக்க இன்னோர் சிறகோ கையில் தவிக்க சக தேவதைகளின் கேளிப் பேச்சோ ரீங்காரமாய் காதில்  ஒலிக்க கண்ணீர் துளிர் சேர்த்து தனிமை கயிற்றிலே ஓர் மாலைக் கோர்த்து உடைந்த சிறகை ஒட்ட வைக்க தேடிக் காத்திருந்தாள் தேவனை.. ஓர் ஈரப் புன்னகையோடு! அவள் நீல கண்கள் நீள வானில் பதிந்திருக்க இருளை விரட்டி வெளிச்சம் பூட்டி தேவன் ரதம் வரும் சத்தம்! சத்தம் கேட்டு சட்டென துயில் களைந்திட தேவதை கதையின் முடிவறியா நான்! இப்படி அகிலும் முகிலும் மீறித்திரிந்து நிஜங்கள் மறந்து நிழலில் தொலைந்திடும் கனாக்கள் ஓர் முடிவிலி....

நீங்கா(தே)தா நீ

இருள் சூழ்ந்த என் இதயத்திற்கு  ஒற்றை தீபமாய் நீ நிசப்தமற்ற என் நள்ளிரவுகளில் நீங்காத நினைவுகளாய் நீ என் கருப்பு வெள்ளை கனாக்களுக்கு வண்ணங்கள் தரும்  எண்ணங்களா...

நிம்மதியாய் ஓர் நித்திரை

Image
நாணல் வேய்ந்த கூரை செம்மண் தேய்த்த தரை அடித்த மழையில் கரைந்து விழுந்து சிரிக்கும் சாணச் சித்திரமிட்ட சுவர் பெட்டியாய் பதினைந்தடி வீடது தளர்ந்த கூரையில் சிட்டுக்குருவிற்கோர் கூடு முற்றத்தில் தட்டி வைத்து குட்டி பூனைக்கோர் வீடு கயிற்று கட்டிலுக்கடியில் காவல் பைரவர் மலர்ந்த பூச்செடியில் சில தேனீக்களும் பூச்சிகளும் அணில் விளையாட தென்னை வழிப்போக்கர்கள் இளைப்பாற சிறு திண்ணை இருப்பதை பகிர்ந்து விட்ட நிம்மதியில் நித்திரையில் மூழ்கிப்போனாள் அவள் தென்றல் தாலாட்ட நிலாப்  போர்வையில் மழை கோலமிட்ட  வாசலில்!

புதுமனை புகுவிழா

புதுமனை புகுவிழா ஓராயிரம் வண்ணத்து பூச்சிகள் மூளைக்குள் எங்காே ஒரு மூலையில் இன்னிசை மணி அடிக்க என் செல் எல்லாம் பூப்பறித்து மாலையிட்ட இதய கூட்டிற்குள் பதம் பார்த்து அவன் பாதம் பட பட்ட இடம் எல்லாம் சட்டென மிளிர தடம் எங்கும் காதல் துளிர அழகாய் அரங்கறேும் ஓர் புதுமனை புகுவிழா நம் காதல் திருவிழா!