நிம்மதியாய் ஓர் நித்திரை




நாணல் வேய்ந்த கூரை
செம்மண் தேய்த்த தரை
அடித்த மழையில் கரைந்து
விழுந்து சிரிக்கும்
சாணச் சித்திரமிட்ட சுவர்
பெட்டியாய் பதினைந்தடி வீடது

தளர்ந்த கூரையில் சிட்டுக்குருவிற்கோர் கூடு
முற்றத்தில் தட்டி வைத்து குட்டி பூனைக்கோர் வீடு
கயிற்று கட்டிலுக்கடியில் காவல் பைரவர்
மலர்ந்த பூச்செடியில் சில தேனீக்களும் பூச்சிகளும்
அணில் விளையாட தென்னை
வழிப்போக்கர்கள் இளைப்பாற சிறு திண்ணை

இருப்பதை பகிர்ந்து விட்ட
நிம்மதியில் நித்திரையில்
மூழ்கிப்போனாள் அவள்
தென்றல் தாலாட்ட
நிலாப்  போர்வையில்
மழை கோலமிட்ட  வாசலில்!









Comments

Post a Comment

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காலம் சிறியது!

அவள்-கடல் ❤️