நீங்கா(தே)தா நீ
இருள் சூழ்ந்த என்
இதயத்திற்கு
ஒற்றை தீபமாய் நீ
நிசப்தமற்ற என் நள்ளிரவுகளில்
நீங்காத நினைவுகளாய் நீ
என் கருப்பு வெள்ளை கனாக்களுக்கு
வண்ணங்கள் தரும்
எண்ணங்களாய் நீ
விடையற்ற வினாவாய்
நான் தாெடர முடியாதத்
தொடர் கதையாய் நீ
கார் புள்ளிக்கும் முற்றுப் புள்ளிக்கும்
இடைப்பட்ட சிறு நம்பிக்கையாய் நீ
முற்றுப் புள்ளிகளை எல்லாம்
முட்டிக் காெண்டு முளைத்தெழும்
நின் நினைவலைகளுக்கு முடிந்தால்
இன்னாேர் முற்றுப் புள்ளி வைத்து விட்டுப்பாே நீ..
Comments
Post a Comment