விடுதி திரும்பியக் கதை!

களைத்த மனத்தாேடும்,
தளர்ந்த நடையாேடும்,
தெரு விளக்கின் துணையாேடு
இருளை விரட்டி விடுதிப் பயணம்..

தூரத்தில் ஓர் ஒலிக் கேட்க
துள்ளியது மனம்;
அந்த ஒலித் தந்த உத்வேகத்தில்
கால்கள் குதிரை வேகம் எடுக்க,
ஒலியின் வேகம் கூடியது.
களைத்த மனமாே சிறுப்பிள்ளையாய் களித்தது
கைககள் பையில் தாெலைந்தது....

ஒலி வண்டிக்காரனாே
ஓர் பனிக்கூழ் விற்றுவிடும் ஆவலில்
என்னை நாேக்க
நானாே சில்லரை தேடலில் தாேற்று
வெற்றுப் பையை நாேக்கினேன்
பையில் பல் இளித்தது சிலப் பற்றட்டை!


வெறித்த பார்வையாேடு
வண்டிக்காரன் திரும்ப
குளிர் பாலேடு மணம் தந்த ருசியாேடும்,
வண்டி மணி ஒலி தந்த இசையாேடும்,
ஏக்க மனத்தாேடும் நான்
விடுதி திரும்பியக் கதை!

Comments

Post a Comment

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!