ஓர் பயணம்
முகில் எடுத்து
மழை நனைத்து
மழை நனைத்து
முகம் துடைத்து
மண்வாசனை தெளித்து
சப்த வண்ணச்
சாயம் பூசி
மலை மேடையில்
அரங்கேறும் ஓர்
ஒப்பனை நாடகம்
மண்வாசனை தெளித்து
சப்த வண்ணச்
சாயம் பூசி
மலை மேடையில்
அரங்கேறும் ஓர்
ஒப்பனை நாடகம்
ஒப்பனையில் வியந்து
ஒளிந்து கிளை நெளிந்து
தென்றல் வீசிடும் முன் அந்தி நேரம்
நேரத்திற்க்கு தோதாக
நேர்த்தியாய் புகை வண்டி மெட்டிட
அங்கொன்றும் இங்காென்றுமாய்
எண்ணச் சிதறில் சிதறி இருக்கும்
மானுடர்களுக்கு மத்தியில்
மலை மேடயைில் மனம் தொலைத்து
சன்னல் கம்பி கிழித்து
கன்னம் தீண்டும் வாடை காற்றுடன்
கவிப் பாடும் ஓர் பயணம்...
நேர்த்தியாய் புகை வண்டி மெட்டிட
அங்கொன்றும் இங்காென்றுமாய்
எண்ணச் சிதறில் சிதறி இருக்கும்
மானுடர்களுக்கு மத்தியில்
மலை மேடயைில் மனம் தொலைத்து
சன்னல் கம்பி கிழித்து
கன்னம் தீண்டும் வாடை காற்றுடன்
கவிப் பாடும் ஓர் பயணம்...

௮ருமையான வரிகள்.! பயணம் தொடரட்டும்!!!...
ReplyDeleteஅருமையான மற்றும் அழகான வரிகள்.! அடுத்து எப்போது
ReplyDeleteThank you Sharath :)
Delete