இசைக்கச்சேரி




மேகங்கள்  ஆரோகணம் அவரோகணம்  பாட  
மதுவந்தி ராகமாய் மழை 
சூறைகாற்று தாளமிட 
ஆடும் சோலை,திரைசீலை 
இடி மெட்டிட மின்னல் விளக்கிற்கு 
வண்ணம் சேர்க்கும் வானவில் 
மண்வாசனை மணத்துடன் 
அழகே அரங்கேறும் கச்சேரி
ஐம்புலன்களை களித்திடும் கச்சேரி. 




இன்னிசை கச்சேரியில், 
மூழ்கிடும் சிலர் மிதந்திடும் பலர் 
ரசித்திடும் சிலர் தவித்திடும் பலர் 
சிலருள் ஒருத்தியாய் நான் 
முன்வரிசை இருக்கைதனில் மழைகட்சேரியை
காணக் காத்திருக்கும் சிலருள் ஒருத்தியாய் நான் 
கையில் ஒருக் குவளை குளம்பியுடன்.


Comments

Post a Comment

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!