கவிதைகள் எனும் சில

*வார்த்தைகளற்ற அகராதியொன்றைக் கண்டு விழிப்பவர்களுக்கு எப்படி
நான் எடுத்துரைப்பேன் அது
நீ பேசிய வார்த்தைகளால்
நான் தொடுத்த அகராதியென்று.

*அட்சயப் பாத்திரமாய் என் இதயம்…
அள்ள அள்ள குறையாத
நின் காதலை ஏந்தி :)

*ஓர் மின்னல் பார்வைப் பார்த்தே இடி இடிக்க வைக்கின்றாய் என் இதயத்தை.. அடுத்தென்ன நம் மனக் காட்டில் காதல் கன மழை தான்.

*சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிக் கொண்டச் சிறு இரையாய் நான்... தப்பிக்க நினைத்திடினும் இன்னும் அதிகமாய் ஒட்ட வைக்கின்றது நினைவுப் பசை.

*விடியாமலேக் கிடக்கின்றதென் காலை!
ஒரு வார்த்தைப் பேசி விடு விலகி விட்டுப் போகட்டும் இந்த மையிருள்!

*மதி மறைந்தாலும்
பொழுது புலர்ந்தாலும்
காலம் கரைந்தாலும்
நின் நினைவுக்கோர் பஞ்சமில்லை
அது தஞ்சமடைந்தது
என் நெஞ்சம் என்பதால்.

*நிமிடத்திற்கு ஒரு முறை
நிலைக் கண்ணாடியைப் பார்க்கிறேன் அதில் என் பிம்பத்திற்கு பதில்
உன் உருவம் தெரிவதால்.

Comments

  1. மிக அருமை . .
    இது உண்மையில் தங்களின் படைப்பு தானா?
    நம்ப முடியவில்லை . .

    ReplyDelete
  2. Replies
    1. தங்களின் அடுத்த படைப்பு எப்பொழுது ?

      Delete
  3. செம.... அருமை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!